கிழக்கு லடாக் பகுதியில் நடந்த தாக்குதலின் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையில், சீனப் பொருள்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பலர் வலியுறுத்தினார்கள்.
கிழக்கு லடாக் பகுதியில் நடந்த தாக்குதலின் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையில், சீனப் பொருள்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பலர் வலியுறுத்தினார்கள்.
இந்நிலையில், மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த திடீர் முடிவை பல தலைவர்கள் வரவேற்ற நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " சீன செயலிகளை தடையை நாங்கள் வரவேற்கிறோம். இச்செயல் இந்தியாவின் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை அதிகரிக்கும்" என்றார்.