தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜெய்சங்கரை பாராட்டிய பாம்பியோ! - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்திகள்

வாஷிங்டன்: அமெரிக்க-இந்தியா உறவை முன்னேற்றுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கும் வெளிவுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் பாம்பியோ பாராட்டியுள்ளார்.

Pompeo praises Jaishankar for advancing US-India ties
Pompeo praises Jaishankar for advancing US-India ties

By

Published : Jan 6, 2021, 1:07 PM IST

இது குறித்து ட்வீட் செய்துள்ள அமெரிக்க வெளிவுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ, “அமெரிக்க - இந்தியா நாடுகளுக்கிடையேயான உறவு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவையனைத்தும் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், தலைவராகவும் உள்ள எனது நண்பர் ஜெய்சங்கரால் சாத்தியமாகியுள்ளது” என்றுள்ளார்.

மேலும் அந்த ட்வீட்டில் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ள மைக் பாம்பியோ, கவுதிமோடி ஹேஷ்டேக்கை உபயோகித்துள்ளார்.

அமெரிக்க வெளிவுறவுத் துறை செயலர் பாம்பியோ ட்வீட்

முன்னதாக 2019ஆம் ஆண்டில் ஹூஸ்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...அமெரிக்கா விரைவில் நாளொன்றுக்கு, 10 லட்சம் தடுப்பூசிகளை வழங்கும்!

ABOUT THE AUTHOR

...view details