ஜனநாயகம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கலந்துகொண்டார். அப்போது அவர் சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு, ஐரோப்பிய நாடுகளை அச்சத்தின் பிடியில் வைத்திருக்க பல்வேறு தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன எனவும், சீன அரசு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் திட்டமிட்டு போலி தகவல்களைப் பரப்பி வருகின்றன எனவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், மற்ற நாடுகளைப் போலவே ஐரோப்பாவும் சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், சீனா தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம், கரோனா பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மோதல் போக்கு தொடர்ந்து நிலவிவருகிறது. இந்த மோதலின் எதிரொலியாகத்தான் அமெரிக்க அரசு சார்பில் சீனா மீது தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சீனா தொடர்பான விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய புள்ளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:உய்கர் இஸ்லாமியர்கள் விவகாரத்தை கையிலெடுத்து சீனாவுக்கு கட்டம் கட்டும் ட்ரம்ப்