தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மாலத்தீவு சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்! - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ

மாலி: இந்திய பசிபிக் பயணத்தின் ஒரு அங்கமாக மாலத்தீவு நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ சென்றுள்ளார்.

Pompeo Pompeo
Pompeo

By

Published : Oct 28, 2020, 10:18 PM IST

Updated : Oct 28, 2020, 10:27 PM IST

இந்தியா, இலங்கை, மாலத்தீவு, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ பயணம் மேற்கொண்டு வருகிறார். அக்டோபர் 25 ஆம் தேதி, இந்தியாவுக்கு வந்த அவர், மூன்றாவது வருடாந்திர அமெரிக்க இந்திய 2+2 அமைச்சர்களுக்கு இடையேயான உரையாடலில் பங்கேற்றார்.

அதனைத் தொடர்ந்து, மாலத்தீவு நாட்டுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ சென்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மாலத்தீவு செல்வது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க மாலத்தீவு நாடுகளின் உறவை மேம்படுத்த எதிர் நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அவர் இலங்கைக்குச் சென்றார். மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு இந்தோனேஷிய ஆட்சியிலும் அவர், அங்கு முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Last Updated : Oct 28, 2020, 10:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details