பிரேசில் நாட்டில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேயர் ரியே வில்சன் விட்செஸ் மேற்கொண்டு வருகிறார்.
குற்றவாளிகளை என்கவுன்டரில் போட்டுத் தள்ளும் பிரேசில்!
ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை காவல்துறையினர் தொடர்ந்து சுட்டுக் கொன்று வருகின்றனர்.
அதன்படி 2013 ஆம் ஆண்டு முதல் குற்றவாளிகள் சுட்டுக்கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்தாண்டு வரை 1, 534 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் அந்நாட்டு காவல்துறையினர் கொலை செய்யும் சம்பவம் புதிய உயரத்தை எட்டியுள்ளது.
எனினும், திருட்டு சம்பவங்களை தவிர பிற குற்றச் செயல்களில் மாற்றம் ஏதும் இல்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குற்றத்தை தடுக்க என்கவுன்டரில் பிரேசில் தீவிரமாக இறங்கியுள்ளதால், குற்றவாளிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.