தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

சார்லோட்: வடக்கு கரோலினா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

By

Published : May 1, 2019, 4:18 PM IST

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்நிலையில், வடக்கு கரோலினா பல்கலைகழகத்தின் வளாகத்தில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த நான்கு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சரமாரி துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்திய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர் அதே பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலை எதற்காக அவர் நடத்தினார் என்பது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details