தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி போதைப்பொருள் கும்பலை பந்தாடிய காவலர்கள்! - peru police

பெரு: கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடமணிந்து போதைப்பொருள் கும்பலை காவல்துறையினர் அதிரடியாக கைதுசெய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Police dressed as Santa and elf seize drugs in Peru
Police dressed as Santa and elf seize drugs in Peru

By

Published : Dec 17, 2020, 9:20 PM IST

பெரு நாட்டில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டில் ரகசியமாக போதைப்பொருளை பதுக்கிவைத்து விற்பதாக அந்நாட்டு புலனாய்வு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க காவல்துறையினர் திட்டம் தீட்டினர்.

அதன்படி, யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சம்மந்தப்பட்ட வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து நான்கு பேரை கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,187 போதைப்பொருள் பாக்கெட்டுக்களையும், ஐந்து குண்டுகள் கொண்ட ஒரு துப்பாக்கி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த போலீஸ்

இந்த சம்பவமானது டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நைஜீரியா பள்ளி மாணவர்கள் கடத்தல்; போகோ ஹாராம் அமைப்பு பொறுப்பேற்பு

ABOUT THE AUTHOR

...view details