டிரக்கி (அமெரிக்கா): தஹோ ஏரி பகுதியில் கோல்ஃப் மைதானத்திற்கு அருகே இரட்டை என்ஜின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என காவல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்க நாட்டின் வட கலிபோர்னியா எல்லைக்கு அருகே, இரட்டை என்ஜின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அலுவலர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஆறு பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என காவல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் தொடர்பான டிஎன்ஏ அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியுள்ளது. ஓடுபாதையிலிருந்து விலகி சென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க : பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் 31 பேர் உயிரிழப்பு