'மார்னிங் கன்சல்ட்' என்னும் நிறுவனம் நடத்திய பிரபல ஆட்சியாளர்கள் குறித்த பகுப்பாய்வில், நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இது நரேந்திர மோடியின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்துவருவதைக் குறிக்கிறது.
'மார்னிங் கன்சல்ட் குளோபல் லீடர் அப்ரூவல் ரேட்டிங் டிராக்கர்'இன் பகுப்பாய்வு தரவரிசைப் பட்டியலில், இந்த ஆண்டும், உலகின் பிரபலத் தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோடி முதலிடத்தைத் தக்கவைத்துக்-கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ஜோ பைடன், போரிஸ் ஜான்சன் உள்பட பல உலகத் தலைவர்களை முந்தி, நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மார்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள உலகத் தலைவர்கள் தரவரிசை தொடர்பாக வெளியான பட்டியலில் 71 விழுக்காடு ஆதரவு பெற்று நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 66 விழுக்காடு ஆதரவு பெற்று இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் பிரபல ஆட்சியாளர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்
இதில் ஜோ பைடன் 43 விழுக்காடு ஆதரவைப் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ 43 விழுக்காடு ஆதரவை பெற்று ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், போரிஸ் ஜான்சன் 26 விழுக்காடு ஆதரவை மட்டுமே பெற்று 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜனவரி 13 முதல் 19 வரையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளதாக மார்னிங் கன்சல்ட் தெரிவித்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந் கொண்ட இந்திய மக்களில் 70 விழுக்காட்டினர் இந்தியா சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 30 விழுக்காட்டினர் இந்தியா தவறான திசையில் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2020 மே மாதம் நரேந்திர மோடி 84 விழுக்காடு ஆதரவைப் பெற்றிருந்தார். 2021 மே மாதத்தில் 63 விழுக்காடாகக் குறைந்த ஆதரவு தற்போது 71 விழுக்காடாக அதிகரித்துள்ளது எனவும் மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் 13 பிரபலமான உலகத் தலைவர்களை 'மார்னிங் கன்சல்ட்' பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்கிறது. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மனி, ஃபிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அடங்குவர்.
இந்த நிறுவனம் 2014இல் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 15 மில்லியனுக்கும் அதிகமான நேர்காணல்களைச் சேகரிக்க இது உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அணுகுகிறது.
இதையும் படிங்க: உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர்- டைம் இதழ் பட்டியலில் இடம் பிடித்த மம்தா, மோடி