நியூயார்க்கில் கடந்தவாரம் முதல் 74ஆவது ஐநா பொதுக்கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு ஏழுநாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
நியூயார்க்கில் உலகத் தலைவர்களுடன் மோடி சந்திப்பு
வாஷிங்டன்: ஐநா பொதுக்கூட்டத்தையொட்டி நியூயார்க்கில் பல்வேறு நாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
முன்னதாக, ஹூஸ்டன் நகரில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி, அங்கு கூடியிருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார். இதில், சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்துகொண்டார்.
இதையடுத்து, ஞாயிறு இரவு (உள்ளூர் நேரப்படி) நியூயார்க்கில் தரையிறங்கிய பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், மலத்தீவு அதிபர் இப்ராஹிம் மொகமத் சோலி, இத்தாலி பிரதமர் ஜெஸபி கான்டே, கத்தார் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி உள்ளிட்ட உலகத் தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.