தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வெள்ளை மாளிகை பின்பற்றும் வேறு நாட்டு தலைவர்கள் யார் தெரியுமா? - வெள்ளை மாளிகை பின்பற்றும் ஒரே வேறு நாட்டு தலைவர் யார்?

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கால் பின்பற்றப்படும், உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும், பிரதமர் மோடியும் ஆவர்.

PM Modi becomes only world leader to be followed by WH on Twitter
PM Modi becomes only world leader to be followed by WH on Twitter

By

Published : Apr 12, 2020, 11:06 AM IST

அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை தற்போது 21 மில்லியன் ட்விட்டர்வாசிகள் பின் தொடர்கின்றனர். இதில் 19 பேரை மட்டுமே வெள்ளை மாளிகை பின்தொடர்கிறது.

வெள்ளை மாளிகை பின்பற்றும் அமெரிக்க அல்லாத மூவர்?

அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் உள்ளிட்ட 16 அமெரிக்கர்கள் ஆவர். அதேபோல் வெள்ளை மாளிகை ட்விட்டர் பக்கம் வேறு நாட்டு தலைவர்களையும் பின்தொடர்கிறது.

அதில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும், பிரதமர் நரேந்திர மோடியும் அடங்குவர். மேலும், இந்திய தூதரகமும் அந்தப் பக்கத்தால் பின்தொடரப்படுகிறது.

வேறு நாட்டு தலைவர்களில் ராம்நாத் கோவிந்த், மோடி ஆகிய இருவரை மட்டும்தான் அமெரிக்க வெள்ளை மாளிகை ட்விட்டர் பக்கம் பின்தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... தமிழ்நாட்டில் மேலும் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்
று

ABOUT THE AUTHOR

...view details