தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

லிபர்ட்டி சிலையை வட்டமிட்ட  மனித உரிமை மீறல் பதாகை! - united nation news update

நியூயார்க்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநா பொதுச்சபையில் உரையாற்றுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், 'பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர ஐநா உதவ வேண்டும்' என்ற பதாகை ஏந்திய விமானம் ஒன்று நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி சிலையை சுற்றி வந்தது.

Statue of Liberty

By

Published : Sep 28, 2019, 10:33 AM IST

பலுசிஸ்தானில் நிகழ்ந்துவரும் மோசமான மனித உரிமை நிலைமைகளை எடுத்துக்காட்டு விதமாகவும், அங்கு நிலவும் பிரச்னைகளை சர்வதேச கவனத்திற்கு கொண்டுவருவதற்கும் உலக பலூச் அமைப்பின் (WBO) மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து முயற்சித்துவருகின்றனர்.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், "பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர ஐநா உதவ வேண்டும்" என்று பதாகை ஏந்திய விமானத்தை நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி சிலையை சுற்றி வரச் செய்தனர்.

நியூயார்க் நகரத்தின் ஹட்சன் ஆற்றில் அமைந்துள்ள நம்பிக்கை மற்றும் சுதந்திரத்தின் அடையாளமான லிபர்ட்டி சிலையை சுற்றி பதாகை ஏந்திய விமானம் பத்துமுறை வட்டமிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் பார்க்க : பாகிஸ்தானை உலுக்கிய கண்டீல் பலோச் கொலை வழக்கு - சகோதரருக்கு ஆயுள்!

ABOUT THE AUTHOR

...view details