தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'வெனிசுவேலா அதிபரை அமெரிக்காவுக்குக் கடத்துவதே திட்டம்' கைதான அமெரிக்கரின் வாக்குமூலம் - வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைல அமெரிக்கவுக்கு கடத்த திட்டம்

கராகஸ் : வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை விமானம் மூலம் அமெரிக்காவுக்குக் கடத்த திட்டமிட்டதாக அந்நாட்டில் கைதான முன்னாள் அமெரிக்க பாதுகாப்புப் படை அலுவலர் தெரிவித்துள்ளார்.

venezuella president
venezuella president

By

Published : May 8, 2020, 1:31 AM IST

கரீபியன் நாடுகளில் ஒன்று வெனிசுவேலா. கச்சா எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிக்கோலஸ் மதுரோவின் அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஒரு கும்பல் கடந்த வாரம் ஈடுபட்டது. இந்த சதி முறியடிக்கப்பட்ட நிலையில், அந்தக் கும்பலைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கைதான முன்னாள் அமெரிக்க வீரர்களுள் ஒருவரான லூக் டென்மான், "அதிபர் நிக்கோலஸ் மதுரோவை விமானம் மூலம் கடத்துவதே எங்கள் திட்டம். அதற்காக கராகஸ் விமான நிலையத்தைக் கைப்பற்றுமாறு எனக்கு உத்தரவிடப்பட்டது" என விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புப் படையில் கடந்த 2006ஆம் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றியதாகத் தெரிவித்த லூக், அந்த காலகட்டத்தில்தான் சதித் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட முன்னாள் அமரிக்கா பாராட்ரூப் பாதுகாப்புப் படை அலுவலர் ஜார்ஜ் கோட்ரேயூவைத் தான் சந்திக்க நேர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

லூக் டென்மான் வாக்குமூலம்

மேலும், சதித் திட்டத்தில் ஈடுபட்ட வெனிசுவேலா வாசிகளைத் தானும், தன்னுடன் கைதான மற்றொரு முன்னாள் அமெரிக்கர் வீரர் பெர்னும் பயிற்சி அளித்தாக லூக் கூறியுள்ளார்.

இதையடுத்து, திட்டத்துக்குத் தேவையான ஆயுதங்களை ஜார்ஜ் கோட்ரேயூ நிர்வகித்து வரும் சில்வர்கார்ப் நிறுவனம் தயாரித்து வழங்கியதாகக் கூறிய லூக் டென்மான், ஜார்ஜ் கோட்ரேயூ, மையாமியைச் சேர்ந்த அரசியல் ஆலோசகர் ஜே.ஜே.ரான்டோன், மற்றும் வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோ ஆகியோர் கையெழுத்திட்ட 213 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்த பத்திரிகையின் நகலை வெனிசுவேலா அலுவலர்களுக்குச் சமர்ப்பித்தார்.

இதற்கிடையே, இணைதளத்தில் வெளியான காணொலி ஒன்றில் பேசிய ஜார்ஜ் கோட்ரேயூ, "ஜுவான் குவைடோ தன் மனதை மாற்றிக்கொண்டதாலும், சில்வர்கார்ப் நிறுவனத்துக்கு வரவேண்டிய பணம் வராமல் போனதாலும் தனியாகக் களமிறங்க முடிவெடுத்தேன்" எனக் கூறியுள்ளார்.

"ஜார்ஜ் கோட்ரேயூவுக்கு யார் உத்தரவிட்டது?" என்ற வெனிசுவேலா அலுவலர்களின் கேள்விக்கு லூக் டென்மான், "(அமெரிக்க) அதிபர் டொனால்டு ட்ரம்ப்" எனப் பதிலளித்துள்ளார்.

ஆனால், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் சூறாவளியை ஏற்படுத்திய இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கும் அமெரிக்க அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பாகிஸ்தான் விமானப் படையில் முதல்முறையாக ஒரு இந்து பைலட்!

ABOUT THE AUTHOR

...view details