அமெரிக்கா நாட்டின் மினசோட்டா மாகாணத்தில் வசித்து வருபவர் தாமஸ் கோஸ்கோவிச். இவர் கடந்த சனிக்கிழமை "பைபர் கப்" என்னும் சிறிய ரக விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக உயர் மின்அழுத்த கம்பிகளில் சென்று சொருகியுள்ளது.
விமானத்தை உயர் மின்னழுத்த கம்பிகளில் சொருகிய பைலட்... உயிர் தப்பிய அதிசயம்! - விமானம் கட்டுப்பாட்டை இழந்து உயர் மின்னழுத்த கம்பிகளில் சொருகியது
செயிண்ட் பால்: விமானம் கட்டுப்பாட்டை இழந்து உயர் மின்னழுத்த கம்பிகளில் சொருகிய நிலையில் நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
விமானத்தை உயர் மின்னழுத்த கம்பிகளில் சொருகிய பைலட்
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர், அப்பகுதியின் மின்சாரத்தை துண்டித்து விமானத்திலிருந்து பைலட் தாமஸ் மீட்டெடுத்தனர். அதிர்ஷ்டவசமாக பைலட் எந்த ஒரு காயமுமின்றி தப்பித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: காவல் படையில் சேர்ந்த 6 நாய்கள் - குளோனிங் முறையில் தயாரித்து அசத்திய சீனர்கள்!