தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பெண்ணுக்கு பன்றியின் கிட்னி... மருத்துவர்கள் வரலாற்றுச் சாதனை... - பன்றியின் கிட்னி

மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

Pig-to-human transplants
Pig-to-human transplants

By

Published : Oct 22, 2021, 7:31 PM IST

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு. லங்ஓன் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தில் பன்றியின் சிறுநீரகத்தை மனிதருக்கு பொருத்தும் பரிசோதனை நடைபெற்றுவருகிறது. இதற்காக, கால்சேஃப் எனப்படும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனிடையே மருத்துவர்கள், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மூளைச்சாவு அடைந்த பெண்ணுக்கு பொருத்தி சோதனை மேற்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதுபோன்ற உறுப்பு மாற்று சிகிச்சை வரலாற்றில் முதல்முறையாகும்.

இது உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல். அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து ஏழாயிரம் பேர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்துள்ளனர். இதில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறுநீரகம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், இந்த சாதனை முக்கியதும் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:மருத்துவமனையில் நடிகர் சித்தார்த்... ரசிகர்கள் வருத்தம்...

ABOUT THE AUTHOR

...view details