உலகம் முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நோயை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், கரோனா நோயாளிகளைக் கண்காணிக்கும் விதமாக பயோ சென்சார் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு, Philips Biosensor BX100 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த சென்சார் ஒருவரின் இதயத்துடிப்பு, சுவாச துடிப்பு போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்கிறது.
இதையும் படிங்க: பூச்சிக்கொல்லிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா மத்திய அரசு?