தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

3ஆம் கட்ட பரிசோதானையில் கரோனாவுக்கு எதிரான mRNA-1273 தடுப்பூசி மருந்து! - கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

நியூயார்க்: மாடர்னா ஆராய்ச்சி நிறுவனம் கரோனாவுக்கு எதிராகக் கண்டுபிடித்த mRNA-1273 என்று பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது.

coe
coe

By

Published : Jul 29, 2020, 4:35 AM IST

கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனையில் உள்ளன. அந்த வகையில், மாடர்னா ஆராய்ச்சி நிறுவனம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை தேசிய சுகாதார நிறுவனங்களின் ஒரு பகுதியான NIAID உடன் இணைந்து கரோனா தடுப்பூசி மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்த மருந்துக்கு mRNA-1273 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முதலாம், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையை மாடர்னா ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர். அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சித் தளங்களில் நடத்தப்படும் இந்தச் சோதனையில், கரோனா தொற்று இல்லாத 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து NIAID அமைப்பில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் அந்தோனி எஸ். ஃபவுசி கூறுகையில், "ஆரம்பக் கட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள், mRNA-1273 மருந்து பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது என்பதை உறுதிப்படுத்தின. தற்போது, அடுத்தக்கட்ட பரிசோதனையைத் தொடங்கியுள்ளோம்.

இதுமட்டுமின்றி தடுப்பூசி மருந்தின் தாக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து ஆய்வுசெய்யப்படுகிறது. இந்தத் தடுப்பூசி மருந்து கரோனா வைரஸ் மனித உயிரிணுக்களுடன் நுழையும்போது உருவாகுவதைத் தடுத்து நடுநிலையான ஆன்டிபாடிஸை உருவாக்குகிறது.

மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு வந்த தன்னார்வலர்களுக்கு 28 நாள்கள் இடைவேளியில் இரண்டு முறை மருந்து செலுத்தப்படும். குறிப்பாக, தடுப்பூசி மருந்தால் கரோனா உயிரிழப்பைத் தடுக்க முடியுமா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை நடைபெறும். அதேபோல், அவர்களின் உடல்நிலையும் தீவிரமாக க்கண்காணிக்கப்படும். அவ்வப்போது, மருந்து செலுத்திக்கொண்ட தன்னார்வலர்களை அழைத்து ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details