கரோனாவுக்கான தடுப்பூசி தேர்தல் நாளுக்கு முன்னதாக வரும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனம் சார்பாக தயாரித்து வரும் ஆராய்ச்சிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக வருவதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு முன்னணி நிறுவனமான மாடர்னா இங்க், நவம்பர் 25ஆம் தேதி அதன் சொந்த தடுப்பூசியின் அங்கீகாரத்தை பெற முடியும் என்று அறிவித்திருந்தது.
ஆனால் கரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவசர கால பயன்பாட்டிற்கு தகுதிபெற வேண்டும். அதற்கு கரோனாவுக்கு எதிரான எந்த தடுப்பூசியாக இருந்தாலும், பெரிய அளவிலான ஆய்வுகளில் பங்கேற்பாளர்களை குறைந்தது இரண்டாவது மாதத்திற்கு கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய கால அவகாசம் தேவை. இதனால் ஃபைசர் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசியை அவசர கால பயன்பாடாக அனுமதிக்க வேண்டும் என்றாலும், அந்த நிறுவனத்தால் நவம்பர் மூன்றாம் வாரத்திற்கு முன்னதாக கோரிக்கை விடுக்க முடியாது.