2020ஆம் ஆண்டையே புரட்டிப்போட்ட கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. உலகெங்கும் 10 நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்துகள், தற்போது மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.
அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தின் இரண்டாம் இடைக்கால முடிவுகளை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், "இந்த ஆய்வு எங்கள் தடுப்பு மருந்து 95 விழுக்காடு பலனளிப்பதை தெளிவாக நிரூபிக்கிறது. எங்கள் மூன்றாம்கட்ட பரிசோதனையில் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்களில் 170 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.