தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி - தயாராகும் அமெரிக்கா - பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசிகள்

பைசர் மற்றும் பயோஎன்டெக் மருத்து நிறுவனங்கள் ஆறு மாதம் முதல் நான்கு வயது குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசி ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளன.

Pfizer
Pfizer

By

Published : Feb 2, 2022, 12:53 PM IST

அமெரிக்காவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கோவிட்-19 மூன்றாம் அலை பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அங்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மருத்துவத்துறை தொடர் முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றது.

அதன் முக்கிய கட்டமாக, பைசர் மற்றும் பயோஎன்டெக் மருத்து நிறுவனங்கள் ஆறு மாதம் முதல் நான்கு வயது குழந்தைகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியை தயாரித்துள்ளன. அவற்றை அவசர காலப் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு விண்ணப்பித்துள்ளன.

இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான உலகின் முதல் கோவிட் தடுப்பூசியாக இவை இருக்கும். அமெரிக்காவில் கடந்த சில நாள்களாக குழந்தைகள் கோவிட் பாதிப்பால் நோய்வாய் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதைக் கருத்தில் கொண்டே இந்த அவசர கால நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தடுப்பூசி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அமெரிக்காவில் சுமார் 16 லட்சம் குழந்தைகள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு கோவிட் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details