தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொழுந்துவிட்டு எரிந்த பேருந்து - 20 பேர் உடல் கருகி பலி! - பெரு

லிமா: பெருவில் சொகுசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்த விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

20 பேர் உடல் கருகி பலி

By

Published : Apr 1, 2019, 5:16 PM IST

தென் அமெரிக்க நாடுகளில்ஒன்றான பெருவில் பயணிகள் சொகுசு பேருந்து திடீரென தீ பிடித்தது. தலைநகர் லிமாவின் வடக்கு பகுதியில் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்குஇந்த விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயங்களுடன் சிக்கி தவித்த பயணிகளை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்புத்துறை அதிகாரி, இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு அங்கன்வாடியில் நடைபெற்ற வெடிவிபத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details