அமெரிக்காவின் அடுத்த அதிபராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
புதிய அதிபரை வரவேற்கும் வகையில், தற்போதைய அதிபர் விழாவில் பங்கேற்பது வழக்கம். இந்த மரபை மீறி, ட்ரம்ப் இதுபோன்று அறிவித்துள்ளது அந்நாட்டின் அரசியல் அரங்கில் இறுக்கமான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், பதவியேற்பு விழாவில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு ஜோ பைடனும் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் என்பது சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதே தனது எண்ணம் எனவும், ட்ரம்ப்பின் செயல்பாடு மிக மோசமான முன்னுதாரணம் எனவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.