வாஷிங்கடன்:அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை, அதாவது அந்நாட்டின் கீழவையின் சபாநாயகராக ஜனநாயகக் கட்சி மூத்த தலைவர் நான்சி பெலோசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 80.
பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 216 பேர் நான்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவருக்கு எதிராக நின்ற குடியரசுக் கட்சி மூத்த தலைவர் கெவின் மெக்கார்திக்கு 209 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து நான்சி சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.