உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க மாஸ்க் அணிவது, தகுந்த இடைவெளியை பின்பற்றுவது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், தாய்ப்பால் மூலம் கரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வின் முன்னணி எழுத்தாளர் கிரெக் வாக்கர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சமீபத்தில் ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் பத்திரிகை வெளியிட்ட ஆய்வு அறிக்கைப்படி, "ஆஸ்திரேலியாவில் மொத்தமாக ஐந்து தாய்ப்பால் சேமிக்கும் வங்கி உள்ளது. இந்த வங்கிகள் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பாலை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். பால் வழங்குபவர்களை பரிசோதிப்பது மட்டுமின்றி, பால் பரிசோதிக்கப்பட்ட பிறகுதான் பலவீனமான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த பால் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த பாஸ்டுரை செய்யப்படுகிறது.