தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பேய் கண்களைக் கொண்ட குழந்தை - அதிர்ச்சியடைந்த தாய்! - parents buys baby monitor

தனது குழந்தையின் கண்கள் மிகவும் பயங்கரமாக இருப்பதாக குழந்தையின் தாய் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பேய் கண்கள்

By

Published : Nov 18, 2019, 8:40 AM IST

உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது. மக்கள் கடின முயற்சியில் செய்யும் வேலைகள், தொழில்நுட்பத்தின் மூலம் சுலபமாக முடிந்துவிடுகிறது. அதேபோல், குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் முதல் கடமை ஆகும். அதையும் எளிமைப்படுத்தும் வகையில், பல வீடுகளில் குழந்தை இருக்கும் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி 24 மணி நேரமும் அதனை பெற்றோர் கண்காணிக்கின்றனர்.

இந்நிலையில், PassionPop என்ற சமூக செயற்பாட்டாளர் பகிர்ந்த ட்வீட் ஒன்று வைரலாகியுள்ளது. அதில், ”எனது குழந்தைக்காக பேபி மானிட்டர் வாங்கினேன். அதுதான், நான் செய்த மிகப் பெரிய தவறு” என கூறியிருக்கிறார்.

அந்த மானிட்டரில் அவரின் குழந்தை, பேய் கண்களை கொண்டதுபோலவும், மூக்கு பகுதி வழக்கத்தைவிட இருண்டு இருப்பது போலவும் தோன்றுகிறது.

தற்போது, இந்த ட்வீட் பலருக்கும் சிரிப்பலையை உண்டாக்கிவருகிறது.

இதையும் படிங்க: அப்பாவின் ஆசி வேண்டி மருத்துவமனையில் திருமணம் செய்த இளம் ஜோடி !

ABOUT THE AUTHOR

...view details