தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டெக்சாஸ் வாட்டர் தீம் பார்க்கில் ரசாயனக் கசிவு: 60 பேர் பாதிப்பு

டெக்சாஸ் தீம் பார்க்கில் ஏற்பட்ட ரசாயனக் கசிவால், 60க்கும் மேற்பட்டோருக்கு தோல் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது.

டெக்சாஸ் வாட்டர் தீம் பார்க்
டெக்சாஸ் வாட்டர் தீம் பார்க்

By

Published : Jul 18, 2021, 3:44 PM IST

டெக்சாஸ்: ஸ்பிரிங் நகரில் சிக்ஸ் ப்ளக் ஹார்பர் ஸ்பிளாஷ்டவுனில் உள்ள தீம் பார்க்கில் நேற்று (ஜூலை.17) திடீரென ரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 60க்கும் மேற்பட்டோருக்கு தோல் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்ற வருகிறது.

அந்த ரசாயனமானது ஹைபோகுளோரைட் கரைசல் மற்றும் 35 விழுக்காடு சல்பூரிக் அமிலம் கலந்ததாக இருக்கலாம் என முதற்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. தற்போது 26 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரசாயனக் கசிவு ஏற்பட்டடெக்சாஸ் வாட்டர் தீம் பார்க்

இதுகுறித்து ஹாரிஸ் கவுண்டி நீதிபதி லீனா ஹிடல்கோ கூறுகையில், "இப்பகுதியில் காற்றின் மாசு தரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. இருப்பினும், இங்கிருக்கும் நபர்கள், வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீம் பார்க் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ரசாயனக் கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

இதையும் படிங்க:ஐரோப்பிய நாடுகளை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு: 160 நபர்கள் பலி

ABOUT THE AUTHOR

...view details