கோவிட்-19 தாக்கம், அதன் காரணமாக பின்தங்கிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவை தொடர்பான முக்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான யுனிசெப் அமைப்பு (United Nations Children's Fund) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, போர், மோதல், இயற்கைப் பேரிடர், பருவநிலை மாற்றம் என பல சிக்கல்களை சந்தித்துவரும் நாடுகளில், கோவிட்-19 பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்நாடுகளில் வறுமை அதிகரித்து, சிறார்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து முறையே கிடைக்காமல் போகும் சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் உரிய வளர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் காங்கோ, நைஜீரியா, சூடான், ஏமன் உள்ளிட்ட பின்தங்கிய நாடுகளில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.