ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டார் என்ற தகவலை கடந்த சில நாட்களாகவே பிரபல செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில், ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டிருப்பதை அமெரிக்க உயர்மட்ட அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். எங்கு, எப்படி கொல்லப்பட்டார் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை.
ஒசாமா மகனின் நிலை என்ன? - அமெரிக்கா அதிர்ச்சி தகவல்! - ஹம்சா பின் லேடன்
வாஷிங்டன்: ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் கொல்லப்பட்டார் என உயர்மட்ட அமெரிக்கா அலுவலர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஹம்சா பின் லேடன்
ஒசாமா பின் லேடனின் மூன்று மனைவிகளில் ஒருவரான காரிஜ் சாபருக்கு பிறந்த ஹம்சா பில் லேடன்தான் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை அடுத்து வழிநடத்தவிருப்பதாக தகவல் வெளியானது. சவுதி அரேபியாவில் பிறந்த இவருக்கு வயது 30. அமெரிக்காவை உலுக்கிய 9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஒசாமா பின் லேடனின் உறவினர்களை ஈரான் அரசு பாதுகாத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
Last Updated : Aug 1, 2019, 7:25 PM IST