தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இணைய வர்த்தகத்தில் சீனாவை முந்திச் செல்கிறது இந்தியா - china

சீனாவில் இணைய வழி வர்த்தகத்தின் செயல்பாடுகளை ஒப்பிடுகையில், இந்தியா முன்னேறி செல்வதாக சில்லறை வணிக நிபுணர் டொவுக் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.

சில்லறை வணிக நிபுணர் டொவுக் ஸ்டீபன்ஸ்

By

Published : May 2, 2019, 9:49 AM IST

உலக வர்த்தக நிறுவனமும், இணைய வழி வர்த்தக மாபெரும் நிறுவனங்களுமான அமேசானும், வால்மார்ட்டும் அமெரிக்காவில் பெரும் வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களும், தங்களின் சந்தை திறனை இந்தியா, சீனா போன்ற நாடுகளில் செயல்படுத்தலாம். அங்கு, அதற்கான முழு அளவு பயனும் கிடைக்கப் பெறும் வகையில் சந்தை இருப்பதாக சில்லறை வணிக நிபுணர் டொவுக் ஸ்டீபன்ஸ் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவின் இணைய வணிக செயல்பாடுகள், சீனாவைவிட அதிக பயன் தரும் நிலையில் இருப்பதாக தெரிவித்திருக்கும் ஸ்டீபன்ஸ், இந்தியா, சீனா சந்தையை இவ்விரு நிறுவனங்களும் முதன்மை நிலையில் கைபற்றுமேயானால், அமேசான், வால்மார்ட்டின் அமெரிக்க சந்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details