தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நாசாவுடன் படிக்க... பள்ளி மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! - school students

விண்வெளி ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு நாசா, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் சோ்ந்து ஆன்லைன் பாடங்கள் நடத்த உள்ளன.

நாசாவுடன் படிக்க...பள்ளி மாணவர்களுக்கு அடித்தது ஐாக்பாட்

By

Published : Jun 24, 2019, 3:12 PM IST

Updated : Jun 24, 2019, 3:44 PM IST

உலகின் புகழ்பெற்ற நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நாசாவுடன் சோ்ந்து விண்வெளி பற்றி ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் பாடங்கள் வழியாக பயிற்சி நடத்த உள்ளது.

இந்தக் கல்வித் திட்டத்தில் ஒருவர் சொந்த விண்வெளி நிலையத்தை வடிவமைப்பது போன்ற எட்டு வகையான ஆன்லைன் பாடத் திட்டங்கள் உள்ளன. மேலும் கல்வித் திட்டத்தின் சிறப்பு அம்சமாக முப்பரிமாண வடிவமைப்பு சவால்கள், மெய்நிகர் யதார்த்தம் (விர்ச்சுவல் ரியால்டி) அனுபவங்கள், தரவு பகுப்பாய்வு பாடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆன்லைன் பாடத்திட்டத்தில் ஒவ்வொரு பாடம் படிப்பதற்கு 50 நிமிடங்கள் தேவைப்படுமாம். மேலும் பயிற்சிக்கான செலவு ஒரு மாணவருக்கு ரூபாய் 140 முதல் 210 வரையே ஆகும்.

விண்வெளி ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

இந்த ஆன்லைன் திட்டத்தில் மாணவர்கள் கலந்துகொள்வதற்கு விண்டோஸ் 10, மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் சந்தா கண்டிப்பாக வேண்டும். இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் பிரிட்டிஷ் ப்ராட்கேஸ்டிங் கார்ப்பரேஷனுடன் இணைந்து இதே மாதிரியான வகுப்புகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 24, 2019, 3:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details