ஆஸ்திரேலியாவில் வரும் 18ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அல்பரி நகரில் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் பொதுமக்களுடன் உரையாடிய போது, அங்கு வந்த பெண் போராட்டக்காரர் ஒருவர் அவர் முட்டையை வீசினார். முட்டை பிரதமர் மீது பட்ட நிலையிலும் உடையவில்லை.
ஆஸ்திரேலியா பிரதமர் மீது முட்டை வீசிய பெண்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் மீது பெண் ஒருவர் முட்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் ஸ்காட் மாரிசன்
இதையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்த காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது மூதாட்டி ஒருவர் தடுமாறி விழுந்தார். அப்போது தன் மீது முட்டை வீசப்பட்டதை பொருட்படுத்தாமல், கீழே விழுந்த மூதாட்டிக்கு, பிரதமர் ஸ்காட் மாரிசன் உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.