அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர், மே 25ஆம் தேதி காவல் துறையினரின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளவில் பெரும் எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது. ஜார்ஜ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நிறவெறியை எதிர்த்தும் அந்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மினியாபோலிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் படுகாயம் - மினியாபோலிஸ் துப்பாக்கி சூடு
மினியாபோலிஸ்: அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதன் எதிரொலியாக, பிரேசில், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் நிறவெறிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், மினியாபோலிஸ் நகரில் இன்று (ஜூன் 21) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து முதல்கட்ட விசாரணையை தொடங்கிய காவல் துறையினர் கூறுகையில், "அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவு முதலே துப்பாக்கிச்சூட்டை தொடங்கினர். பின், அதிகாலையில் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பார்கள், உணவகங்கள், மால்கள், உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்" என்றனர்.