தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கச்சா எண்ணெய்: 20 விழுக்காடு விநியோக வீழ்ச்சியால் விலை கடும் சரிவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. போக்குவரத்து முடக்கம், ஊரடங்கு எதிரொலி, எண்ணெய் தேக்கம் ஆகிய காரணங்களால் விலை சரிவைச் சந்தித்து வருகிறது.

Oil prices plunge again
Oil prices plunge again

By

Published : Apr 28, 2020, 5:21 PM IST

டெல்லி:சர்வதேச சந்தைளில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

போக்குவரத்து முடக்கம், தொழிற்சாலைகள் இயங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெயின் தேவை குறைந்துள்ளது. அதேநேரம் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை தேக்கிவைக்க போதுமான வசதி இல்லாத நிலை உருவாகியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை கண்டுள்ளது.

இன்று அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) வகை கச்சா எண்ணெய் விலை 7.82 விழுக்காடு சரிந்து ஒரு பீப்பாய் 11.78 டாலராக வர்த்தகமாகிறது. அதேபோல, பிரென்ட் வகை கச்சா எண்ணெய் விழுக்காடு குறைந்து ஒரு பீப்பாய் 19.72 டாலரில் வணிகமாகிறது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இந்திய பங்குச் சந்தை!

பல நாடுகளில் பொதுமுடக்கம் சிறிது சிறிதாக தளர்த்தப்படும் சூழலில், வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் எழக்கூடும் எனக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details