தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

போர் பதற்றம் - கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் - கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்

அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவிவருவதால், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Crude oil
Crude oil

By

Published : Jan 11, 2020, 11:43 PM IST

அமெரிக்கா - ஈரான் இடையே அதிகரித்துவரும் போர் பதற்றம் காரணமாக, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜனவரி 6ஆம் தேதி கச்சா எண்ணெய்க்கான உலகளாவிய அளவுகோல், பீப்பாய்க்கு 70 அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது.

சவுதியிலுள்ள கச்சா எண்ணெய் பதப்படுத்தும் ஆலையின் மீது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பிறகு கச்சா எண்ணெய்க்கான ப்ரெண்ட் ஒப்பந்தம், உச்சபட்ச அளவாக பீப்பாய்க்கு 70.74 அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. ஈரானின் பதில் தாக்குதல் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் பங்குச்சந்தைகளும் சரிந்தன.

இதுகுறித்து கொலம்பிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும், உலகளாவிய எரிசக்தி அமைப்பின் தலைமை ஆய்வாளருமான அன்டோயின் ஹாஃப் கூறுகையில், "பதில் தாக்குதல் நடத்தப்படும் என்ற கருத்து பரவிவருவதால் சந்தையில் அது எதிரொலிக்கும். எரிசக்தி, எண்ணெய் ஆகிய உள்கட்டமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். எண்ணெய்க்கான உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், விலைவாசி உயர்ந்து உலகளாவிய பொருளாதார மந்தநிலை உருவாகும். இது ஈரானுக்கு பிரச்னையாக மாற வாய்ப்புள்ளது" என்றார்.

இதையும் படிங்க: அமெரிக்கா - இந்தியா வர்த்தக சச்சரவு: ஆராய்வதற்கு குழு அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details