தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விளம்பரத்தால் கடுப்பான ஒபாமா!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளர்களுள் ஒருவரான ஜோ பிடனை விமர்சிக்கும் நோக்கில் ஒளிப்பரப்பட்ட விளம்பரத்தை, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஒபாமா சாடியுள்ளார்.

Obama biden, ஒபாமா பிடன்
Obama biden

By

Published : Feb 29, 2020, 9:52 AM IST

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் யார் பிரதான வேட்பாளராகக் களமிறங்க உள்ளார் என்பது குறித்து அக்கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் சவுத் கரோலினா மாகாணத்தில், ஜனநாயக் கட்சியினர் இடையே நடைபெறவிருந்த விவாதப் போட்டிக்கு முன்னர் ஒரு விளம்பரம் வெளியானது. அதில், அந்நாட்டின் முன்னாள் துணை அதிபரும்; ஜனநாயகக் கட்சியின் முன்னணி வேட்பாளர்களுள் ஒருவருமான ஜோ பிடன் நம்பகத்தன்மை அற்றவர் என விமர்சிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், சிறுபான்மையினருக்கு எதிராக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசுவது போல காட்சி அமைந்திருந்தது. இந்த விளம்பரத்தை முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போது கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக ஒபாமாவின் செய்தித்தொடர்பாளர் பேசுகையில், "இந்த இழிவிற்குரிய விளம்பரம் குடியரசுக் கட்சிக்காரர்களின் பொய்ப் பரப்புரைகளுள் ஒன்று. ஒபாமாவின் பேச்சைத் திரித்துக் காட்சிப்படுத்தி, சவுத் கரோலினா மாகாணத்தில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரை திசைத்திருப்பும் சூழ்ச்சியாகும்.

எனவே, மக்கள் நலம் கருதி இந்த விளம்பரத்தை ஒளிப்பரப்புவதை தொலைக்காட்சிகள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இதையும் படிங்க : மனைவி பேச்சை கேட்பாரா ஷாருக்கான்?

ABOUT THE AUTHOR

...view details