அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், கடந்த வாரம் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எலியா கம்மிங்ஸ் குறித்து பேசுகையில், ஒட்டுமொத்த அமெரிக்காவிலேயே எங்கும் இதுபோன்ற மிக மோசமான ஆபத்தான இடம் இல்லை.
கம்மிங்ஸ் பிரதிநிதியாக இருக்கும் மாவட்டம் எலி, நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அருவருப்பான இடம் என்று கூறினார். மேலும் நான்கு பெண் ஆப்பிரிக்க-அமெரிக்க (கறுப்பின அரசியல்வாதிகள்) உறுப்பினர்களை இனவெறி ரீதியில் விமர்சித்திருந்தார்.
இதைக் கண்டித்து ஒரு கடிதத்தில், "ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த நாங்கள் ஒருபோதும் இனவெறி, தன்பால் ஈர்ப்பு, நிறவெறி தூண்டும் கருத்துகளை அனுமதிக்க மாட்டோம். ஒருவரின் வம்சாவளியை மட்டும் காரணம்காட்டி சக குடிமகனை வெளியேறச் சொல்வதைவிட வன்முறையானது எதுவும் இல்லை" என்று காட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கடிதத்தை ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ட்ரம்பின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.