நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மசூதிக்குழ் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 5 இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியாகினர். ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றம்: நியூஸிலாந்து பிரதமர் உறுதி! - nz pm ardern
நியூஸிலாந்து: மசூதி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜெஸின்டா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த அடையாளம் தெரியாத நபர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதை தனது ஃபேஸ்புக்கில் நேரலையும் செய்துள்ளார். அதன்பின் அவரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்ததில், அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரன்டன் டாரன்ட்(28) என்பது தெரியவந்தது.
இது குறித்து பேசிய பிரதமர் ஜெஸின்டா ஆர்டர்ன், "இந்த துப்பாக்கிச்சூடு நியூஸிலாந்தின் கருப்பு தினங்களில் ஒன்றாகும். இச்சம்பவம் முன்னரே திட்டமிட்டதாக தெரிகிறது. துப்பாக்கி அனுமதி வாங்கியது முதல் இந்த சம்பவம் வரை என்ன நடைபெற்றது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். ஆனால், ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். நியூஸிலாந்தின் துப்பாக்கி சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவோம்" என்றார்.