உழவர்கள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவிப்ப மற்றும் வசதி), உழவர்கள் ஒப்பந்தத்தின் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) மீதான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள், இன்றியமையாத பொருள்கள் (திருத்தம்) ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இதற்குப் பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் உழவர்கள் மூன்று மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.