தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலக சுகாதார அமைப்பிற்கு நிதி நிறுத்தம் தவறு: ட்ரம்ப் முடிவுக்கு ஐநா தலைவர் கண்டனம்

உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிதி நிறுத்தம் செய்தது தவறு என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

UN
UN

By

Published : Apr 16, 2020, 9:44 AM IST

உலக சுகாதார அமைப்பு தனது கடமையிலிருந்து தவறி சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டி அந்த அமைப்பிற்கான நிதியுதவியை நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

கரோனா வைரஸ் பாதிப்பின் தொடக்கப்புள்ளியான சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக ட்ரம்ப் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டினார். உலக சுகாதார அமைப்பு நிதிகளை முறையாகப் பயன்படுத்தாமல் கரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை மூடி மறைத்துள்ளது எனக் குற்றச்சாட்டை முன்வைத்து ட்ரம்ப் இந்த நிதி நிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற இக்கட்டான சூழலில் உலக சுகாதார அமைப்பிற்கு உதவி அவசியம். இந்தப் பேரிடர் காலத்தில் இதுபோன்ற அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பேரிடரிலிருந்து மீண்டுவந்தபின் தீர ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் கோரிக்கைவைத்துள்ளார்.

அதேபோல் பில்கேட்ஸ், உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் நோய் தடுப்பில் ஈடுபட்டுவரும் முக்கிய அமைப்பாகும். இந்த நேரத்தில் இதுபோன்ற செயல்களில் அமெரிக்க அதிபர் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள்விடுத்தார்.

இதையும் படிங்க:கரோனா பாதிப்பு: ஈக்வடாரில் வீதியில் வீசியெறியப்படும் உடல்கள்

ABOUT THE AUTHOR

...view details