தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

chandrayaan 2 latest லேண்டர் விக்ரமை கண்டுபிடிக்கமுடியவில்லை - நாசா

நிலவின் மேற்பகுதியில் சந்திரயான் 2இன் லேண்டரான விக்ரமை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

NASA

By

Published : Sep 27, 2019, 9:41 AM IST

Chandrayaan 2 latest நிலவின் மேற்பரப்பை ஆராய சந்திரயான் 2 என்ற விண்கலத்தை ஜூலை மாதம் இறுதியில் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த லேண்டர் விக்ரம், தரையிறங்க சில நிமிடங்களே இருந்தபோது அதனுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

லேண்டர் குறித்து ஆராய, தேசிய அளவிளான ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் லேண்டர் விக்ரம் குறித்த தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது.

அதில் சில புகைப்படங்களைப் பதிவிட்டு, "சந்திரயான் 2இன் விக்ரம் லேண்டர் தரையிறங்க வேண்டிய இடத்தின் புகைப்படங்கள் இவை. மாலை நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் லேண்டரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. போதிய அளவிலான வெளிச்சம் இருக்கும்போது மீண்டும் அக்டோபரில் இன்னும் சில புகைப்படங்கள் எடுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளது நாசா.

இதையும் படிக்கலாமே: ட்ரம்பை நம்ப முடியாது - முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் பார்த்தசாரதி

ABOUT THE AUTHOR

...view details