அமெரிக்காவின் பிரபல விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரோப் க்ரூமன், விண்வெளிப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்த நபர்களின் பெயர்களை சிக்னஸ் விண்கலங்களுக்கு சூட்டுவது வழக்கம்.
அந்த வகையில், நார்த்ரோப் க்ரூமனின் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் அடுத்த சிக்னஸ் விண்கலத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீரரான கல்பனா சாவ்லாவின் பெயரைச் சூட்டத் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் பெயரை என்ஜி-14 சிக்னஸ் விண்கலத்திற்கு சூட்டுவதில் நார்த்ரோப் க்ரூமன் பெருமிதம் கொள்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீரராக நாசாவில் வரலாறு படைத்த கல்பனா சாவ்லாவை இன்று நாங்கள் கவுரவிக்கிறோம்.
விண்வெளிப் பயணத்தில் அவர் செய்த பங்களிப்புகள் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. எங்களின் அடுத்த சிக்னஸ் வாகனமான எஸ்.எஸ். கல்பனா சாவ்லாவை விரைவில் சந்தியுங்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.