இது குறித்து ஐ.நா.வின் சர்வதேச உணவுத் திட்டத்தின் இயக்குநர் டேவிட் பீஸ்லி அளித்துள்ள பேட்டியில், "சர்வதேச அளவில் நடைபெறும் மோதல்கள், பேரழிவுகள் மற்றும் அகதிகள் முகாம்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவற்றை நோபல் குழு தொடர்ந்து கவனித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல், கரோனா உள்ளிட்டவை காரணமாக சர்வதேச அளவில் பஞ்சம் குறித்த செய்திகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல சிரமமாக உள்ளது.
மேலும், கரோனா ஊரடங்கால் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர சர்வதேச நாடுகள் பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்து வருகின்றன.