அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியை பார்த்துவிட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 13 பேர் தனியார் நிறுவனருக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் மெக்ஸிகோவுக்கு உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டனர்.
மெக்ஸிகோவில் விழுந்து நொறுங்கிய விமானம் - 13 பேர் பலி! - Mexico'
மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோவில் தனியாருக்குச் சொந்தமான விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் புறப்பட்டு சுமார் இரண்டு மணி நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து,மெக்ஸிகோவின் வடக்கு பகுதியிலுள்ள ஒகாம்போ என்னும் அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.
இதில் பயணித்த 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இரங்கல் வெளியிட்டுள்ள, கனடாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம், இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது. விமானி குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.