தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 5, 2020, 8:35 PM IST

ETV Bharat / international

ரஷ்ய எதிர்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுத்த விவகாரம் - ட்ரம்ப் பரபரப்புக் கருத்து

ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump
Trump

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றபோது திடீரென அவர் மயக்கமடைந்த நிலையில், ரஷ்யாவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கருத்தினை தற்போது தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்கா இந்த விவகாரத்தை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது எனவும், அதேவேளை அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கான எந்தத் தடயமும் அமெரிக்காவுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளரான நவல்னி அந்நாட்டின் ஊழல் புகார் தொடர்பாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர எதிர்ப்பாளரான நவல்னிக்கு

ABOUT THE AUTHOR

...view details