தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பங்குச் சந்தைகளில் சீன நிறுவனங்கள் இடம்பெறுவதைத் தடுக்கமாட்டோம்: அமெரிக்கா உறுதி - No plans to delist chinese firms

வாஷிங்டன்: அமெரிக்க பங்குச் சந்தைகளில் சீன நிறுவனங்கள் இடம்பெறுவதை நாங்கள் தடுக்க மாட்டோம் என அந்நாட்டு கருவூல அலுவலர் ஒருவர் உறுதியளித்துள்ளோர்.

US

By

Published : Sep 29, 2019, 3:25 PM IST

அமெரிக்கா - சீனா இடையே கடந்த ஒரு வருடமாகவே வர்த்தகப் போர் நிலவிவருகிறது. இதனால், தொடர்ந்து இரு நாடுகள் எதிர் தரப்பினரின் பொருட்கள் மீது பரஸ்பரம் கூடுதல் வரிவிதித்து வருகின்றனர்.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அடுத்த மாதம் இருநாட்டு பிரதிநிதிகளும் அமெரிக்காவில் கூடி பேசவுள்ளனர். இதில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்காவில் அமெரிக்க முதலீடுகளைக் குறைப்பது, அமெரிக்கப் பங்குச் சந்தைகள் பட்டியலிலிருந்து சீன நிறுவனங்களை நீக்குவது ஆகிய நடவடிக்கைகள் கொண்டுவருவது குறித்து அமெரிக்க அரசு பிரிசீலித்து வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. இது சீன நிறுவனங்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அமெரிக்க பங்குச் சந்தைகளிலிருந்து சீன நிறுவனங்கள் இடம்பெறுவதைத் தடுப்பு குறித்த திட்டம் ஏதும் தீட்டப்படவில்லை என்றும், அமெரிக்காவில் முதலீடு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம் எனவும் அந்நாட்டு கருவூல அமைச்சகத்தின் பொது விவகாரங்களுக்கான துணை செயலாளர் மோனிகா க்ரோவ்லே தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்காவோடு உறவை பலப்படுத்த முயற்சி: சீனா

ABOUT THE AUTHOR

...view details