தலிபானுடனான பேச்சுவார்த்தைகளை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தி மூன்று மாதங்களுக்கு பிறகு, தற்போது பேச்சுவார்த்தைகளைத் தொடக்கியுள்ளது. பிரபல அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் அணுசக்தி பாதுகாப்பு நிபுணரான ஜார்ஜ் பெர்கோவிச், இந்த புதிய பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது என்கிறார். ஆப்கானிஸ்தானில் நிலைமை ஒன்றும் பெரிதாக மாறவில்லை, எனவே இரு தரப்பினரும் எந்தவொரு உடன்பாடையும் எட்ட வாய்ப்பில்லை என்பது அவர் கருத்தாகும்.
சர்வதேச அமைதிக்கான உலகளாவிய சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோமென்ட்டின் துணைத்தலைவரான பெர்கோவிச் கூறுகையில், காஷ்மீரில் மனித உரிமை நிலைமை பற்றியும் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது குறித்தும், இந்தியா -பாகிஸ்தான் எல்லையிலுள்ள பதட்டங்கள் குறித்தும் நியாயமான கவலை உள்ளதாகவும் கூறினார். பெங்களூரில் நடந்த கார்னகி குளோபல் டெக்னாலஜி உச்சி மாநாட்டில் பங்கேற்க பெர்கோவிச் மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவிடம் அளித்த பேட்டியில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கு பின், காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தானின் வாதங்கள் முக்கியத்துவம் பொறுகிறது. இருப்பினும், டொனால்ட் ட்ரம்பிற்கு தெற்காசியா நாடுகளின் செயல்பாடுகள் குறித்து எதுவும் என்றும் கூறினார்.
கேள்வி: தலிபானுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது எந்த மாதிரியான முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?
பதில்: என்னை பொறுத்தவரை இது வெறும் நிமித்தமான பேச்சு அல்ல. கேம்ப் டேவிட் உடனான சந்திப்பு ரத்து செய்யப்படும் முன்பு வரை, இதில் முன்னேற்றம் இருந்தது. தலிபான்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளதக்க வகையில் இல்லை என்று அமெரிக்க ராணுவத்திற்குள்ளும், இந்தியாவிலிருந்தும் வந்த குரல்கள் மிகவும் முரண்பட்டுள்ளது. சர்ச்சைகள் இருந்தபோதிலும் சில முன்னேற்றம் இருந்தது. அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்கினால், ஒப்புக் கொள்ளப்பட்ட அடிப்படை திட்டத்தில் என்ன மாதிரியான மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று கூறுவது கடினம். தலிபான்களுக்கு பெரிய சலுகைகளை வழங்குவதற்கு களத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. ஏற்கனவே முன்பு இருந்ததைவிட அமெரிக்கா என்ன செய்ய போகிறது என்பது குறித்து எனக்கு தெரியாது.
கேள்வி: கேம்ப் டேவிட்டுடன் தலிபான்கள் பேச்சு வார்த்தைக்கு டிரம்ப் அழைத்தபோதும் அதன் பின் திடீரென்று தாக்குதல்களை சுட்டிக்காட்டி, பேச்சுவார்த்தையை ரத்து செய்தற்கு பின்னால் என்ன நடந்தது?
பதில்: எனக்கு உண்மையிலேயே என்ன நடந்தது என்று தெரியாது. இதேபோன்ற சம்பவங்கள் ட்ரம்ப் நிர்வாகத்தில் இதற்கு முன்னரே பலமுறை நடந்துள்ளது. தன்னை ஒரு பெரிய தலைவனாக காட்டிக்கொள்ள அதிபர் இப்படித்தான் எதையாவது கூறுவார் அல்லது ஒப்புக்கொள்வார். ஆனால் அவர் விஷயம் தெரியாதவர். இங்குள்ள நிலைமைகள் குறித்த அவருக்கு புரியாது. எனவே அவரது ஊழியர்கள் அவரது இந்த முயற்சிகள் பெரும் சிக்கலானது என்றும் சர்ச்சைக்குரியது என்றும் அவரை எச்சரிக்க முயல்கின்றனர். கடைசி நிமிடம் வரை அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று அவர் கவனிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்றால் அவரை மோசமாக சித்தரிப்பார்கள் என்ற முடிவுக்கு வருகிறார்; அதனால் அவர் பேச்சுவார்த்தையை உடனே ரத்து செய்கிறார். எனவே தலிபான்களின் பிரதிநிதிகளுடன் கேம்ப் டேவிட் நடத்தவிருந்த சந்திப்புக்கு முன்பு மக்கள் உணர்ந்துகொண்ட விஷயம் ஒன்றுதான், அதில் ட்ரம்பை மக்கள் இவ்விஷயத்தில் ஆதரிக்கபோதில்லை என்பது. தலிபான்களை மிக மோசமான கொலையாளிகள் என்று மக்கள் கருதுகிறார்கள்; அவர்களை பற்றித் தெரிந்துகொள்ளாமல் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது நல்ல முடிவைத் தராது என்று கருதிய ட்ரம்ப், அந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தார்.
கேள்வி: அமெரிக்காவில் காஷ்மீர் குறித்து இரண்டு சம்பவங்கள நடந்துள்ளன. ஹூஸ்டன் கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்றது குறித்து ஜனநாயகக் கட்சியினர் இடையே விமர்சனம் உள்ளதா? டிரம்ப்பையே 2020 அதிபர் பதவிக்கு பிரதமர் மோடி ஒப்புக் கொண்டதாக குடியரசுக் கட்சியினர் நினைக்கிறார்களா?
பதில்: அமெரிக்காவின் ஹூஸ்டனில் அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி பங்கேற்றத்தில், அரசியல் ரீதியாக இந்தியாவுக்கு பலன்கள் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. இதுவொரு பெரிய விஷயமில்லை. என்னைப் பொறுத்தவரை, ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் காஷ்மீர் நிலைமை குறித்த கருத்துகளுக்கு பதிலளிப்பதில்லை. அதேபோல ட்ரம்ப் - மோடி சந்திப்பு குறித்தும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை.
காஷ்மீர் விவகாரத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது மிக முக்கிய பிரச்னை; இது ஆயுத மோதலுக்கு வழிவகுக்கும். இந்த சிக்கலை அனைவருக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் வகையில் தீர்க்க முடியாததால், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால் இது பிரச்னையை தீர்க்காது. மேலும், காஷ்மீரில் நிலவும் மனித உரிமை மீறல் குறித்தும் கவலைகள் உள்ளது. காஷ்மீர் குறித்த செய்திகளையும் இந்தியா தடுப்பதால் பெரிதாக தெரிந்துகொள்ள முடிவதில்லை. இது அங்கு மிகவும் மோசமான நிலைமைதான் நிலவ வேண்டும் என்கிற முடிவுக்கு இட்டுச்செல்கிறது. செய்திகளுக்கு இந்தியா அனுமதிக்காவிட்டால் நிலைமை மேலும் சிக்கலாகிவிடும். எனவே ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையில் இதுதொடர்பான கேள்விகளே கேட்கப்பட்டது.