ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி வருடாந்திர கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வாஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்திய பொருளாதாரத்தின் ஆற்றலை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதாக நினைத்து கவலைப் படுவதை கைவிட்டு தொழிற்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா - அமெரிக்கா இடையே தீவிர பேச்சுவார்த்தை
வாஷிங்டன்: வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், விரைவில் சுமூகமான நிலை ஏற்படும் என்றார். தற்போது இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...அடுத்த ஆண்டு ஜி7 மாநாடு: ட்ரம்ப் அறிவிப்பு!