கரோனா வைரஸ் நோயின் தாக்கம், உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இருப்பினும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் நியூசிலாந்தில் கடந்த மூன்று வார காலமாக கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட பெற்றோர்களைப் பார்க்க லண்டனிலிருந்து நியூசிலாந்துக்குச் சென்ற இரு பெண்களுக்குக் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தனிமைப்படுத்துவதிலிருந்து இரு பெண்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் ஆக்லாந்திலிருந்து வெல்லிங்டனுக்கு கார் மூலம் சென்றனர்.