உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள அமெரிக்கா, இந்நோய் தொற்றின் மையப்புள்ளியாக தற்போது மாறியுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்து 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க் தற்போது கரோனா பாதிப்பை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது. நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 67 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வென்ட்டிலேட்டர்கள், படுக்கைகள், முகக்கவசங்கள் கிடைக்காமல் தவித்துவருவதாக தெரிவித்த நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரூ க்யூமோ, ஏப்ரல் மாதத்தில் நிலைமை மேலும் மோசமடையும் என அச்சம் தெரிவித்துள்ளார்.