வாஷிங்கடன்:கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற 117ஆவது அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினர்கள் நேற்று முன்தினம் (ஜன.2) பதவியேற்றுக்கொண்டனர்.
அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செனட் சபை உறுப்பினர்களின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் பதவியேற்பு நடைபெற்றுள்ளது.
தற்போது, அந்நாட்டின் கீழவையான ஹவுஸ் ஆஃப் ரெப்பிரசன்டேடிவ் சபையில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 222 உறுப்பினர்களும், குடியரசு கட்சியைச் சேர்ந்த 211 உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி பெல்லோசி, சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.